நிலநடுக்கங்களை முன் கூட்டியே அறியும் புதிய அம்சம்/how2worktamil

 நிலநடுக்கத்தை முன் கூட்டியே அறியும் புதிய அம்சம்


பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னரே ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கையை அனுப்பும்  ஒரு புதிய அம்சத்தை(signal) உருவாக்கியுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. 


ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இந்த பயன் மக்களுக்குச் சரியான நேரத்தில் உதவுதல் மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்கஉதவியாக இருக்கும்.


இந்த அம்சம் தற்போது முதல்கட்டமாக கலிபோர்னியாவில் வெளியிடப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஒரு மினி Siesmometer-ராக செயல்பட்டு  நில அதிர்வு அளவீடுகளை ஆராய்ந்து பயனர்களுக்கு உதவ முடியும். 


மேலும்  இனி வரும் அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் பூகம்பம் நிகழக்கூடும் என்பதைக் குறிக்கும் சிக்னல்களை உணரக்கூடிய சிறிய accelerometers-உடன் வருகக்கூடும் என செய்திகள் பரவுகின்றன.


உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இந்த கருவிகள் பூகம்பம் ஆரம்பம் ஆகும் அதிர்வைக் கண்டறிந்தால், அதை உடனே பூகம்பத்தைக் கண்டறியும் சேவையகத்திற்கு ஒரு சமிக்ஞையாக அனுப்புகிறது, இந்த மையம் செயலி வைத்திருக்கும் பயனர் இருக்கும் இடத்தில் உண்மையில் பூகம்பம் தானா என்பதை உறுதி செய்து எச்சரிக்கை செய்தியை அனுப்பும்.


ShakeAlert அமைப்பு, USGS, Cal OES, கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவற்றால் மாநிலம் முழுவதும் நிறுவப்பட்ட 700 க்கும் மேற்பட்ட நில அதிர்வு அளவீடுகளில் இருந்து சமிக்ஞைகளைப் பயன்படுத்துகிறது.பயனர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திகளை வழங்குவதன் மூலம் பயனர்கள் அவர்களை பாதுகாத்துக்கொள்ள உதவியாக என்று நிறுவனம் கூறியுள்ளது.


பூகம்பத்தைக் கண்டறியும் இந்த அம்சம் இனி வரும் ஆண்டுகளில் உலகின் மற்ற நாடுகளில்  கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்  என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.இவ்வாறே இச்செயலி நமக்கு உதவுகிறது.


இதுபோன்று பல‌ அம்சங்களை கூகுள் நிறுவனமானது அறவே உருவாக்கி கொண்டும்,அதை சரியான முறையில் நடத்தி பயனர்களுக்கு உதவும் வகையில் கொண்டு சென்றே செல்கிறது.இப்போது நாம் பார்த்த இந்த அம்சமானது மக்களுக்கு புது விழிப்புணர்வாகவும்,எந்த அறிவிப்பும் கிடைக்காத நிலையில் இந்த நிலநடுக்கத்தை முன் கூட்டி காட்டும் அம்சம் மிகமிக பயனுள்ளதாகும்.


Post a Comment

Previous Post Next Post