வெறும் 14 வயசுதான்.. அறியாத வயசுல புரியாமல் அந்த மாதிரி படத்தில் நடிச்சுட்டேன்.. குமுறி அழும் சோனா
"அறியாத வயசுல "அந்த" மாதிரி படத்தில் நடிச்சுட்டேன்.. அதுக்காக இப்படியா? 14வது வயசில் நடித்த பலாத்கார சீனை இப்போது ஆபாச வெப்சைட்களில் வெளியிட்டது யார்? இதனால் மிகுந்த மன வேதனையில் இருப்பதாகவும், அதனாலேயே தற்கொலைக்கு முயன்றதாகவும், மலையாள நடிகை சோனா ஆபிரகாம் வேதனை தெரிவித்துள்ளார்.
எப்போது இப்படி ஒரு ஆபாச சீன்கள் வெளிவந்ததோ அப்போது முதலே தனக்கு பெருத்த தொல்லைதான் என்றும், தினம் தினம் வேதனைகளை தன் வாழ்க்கையில் சந்தித்து வருவதாகவும் நடிகை சோனா கண்ணீருடன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை பற்றி அவர் சொல்லும்போது, அந்த படம் நடிக்கும்போது சோனாவுக்கு வெறும் 14 வயசுதானாம்.. கதைப்படி, பலாத்காரம் செய்துவிடுவதால், தற்கொலை செய்து கொள்வதுபோல அந்த கதையின் சீன் இருக்குமாம்.. அறியாத வயசில் அந்த படத்தில் நடித்துவிட்டதாகவும், 150-க்கும் பேர் முன்னிலையில் அப்படி ஒரு சீனில் நடிக்க முடியாது என்று அப்போதே டைரக்டர் சதீஷ் அனந்தபுரிடம் மறுத்ததாகவும் சோனா கூறுகிறார். அதற்குபிறகு சமாதானப்படுத்திதான் டைரக்டர் உட்பட பலரும் அந்த சீனில் நடிக்க வைத்தார்களாம்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சோனா ஆபிரகாம்... சில ஆண்டுக்கு முன்பு ஃபார் சேல் என்ற மலையாள படத்தில் பலாத்கார சீனில் சோனா நடித்திருந்தார்.. ஆனால், அதே பலாத்கார காட்சி ஆபாச வெப்சைட்டில் அடுத்த சில மாதங்களில் ஆபாச வெப்சைட்களில் வெளியானது.
அந்த ஷூட்டிங் முடிந்தபிறகு, மறுபடியும் ஸ்கூலுக்கு படிக்க போய்விட்டாராம் சோனா.. பிளஸ் 2 படிக்கும்போது, அந்த படத்தில் வெளிவராத பல பலாத்கார சீன்கள் வெப்சைட்டில் வந்துவிட்டது என்றும், குடும்பமே அதை பார்த்து ஷாக் ஆனதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பெண்கள் அமைப்பினர் இந்த விஷயத்தில் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.. மலையாள திரையுலக சங்கமான அம்மா வில் நடிகைகளுக்கு பாதுகாப்பில்லை என்று நடிகை பத்மபிரியா, ரேவதி, பார்வதி ஆகியோர் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது கேரளாவில் வெடித்து கிளம்பி உள்ளது.
இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. சோனாவின் பெற்றோர்களின் ஒப்புதலை பெற்றும், அவர்களின் பணத்தாசையாலும்தான் அந்த மாதிரி காட்சியில் நடிக்க வைக்கப்பட்டது.. அப்படி இருக்கும்போது, எல்லாவற்றையும் மறைத்துவிட்டு, சோனா இப்போது வந்து புகார் அளித்துள்ளது ஏன் என்றும், எத்தனையோ வருடங்களுக்கு முன்பே வெளியான அந்த வீடியோவை இப்போது பரப்பிவிடுவது யார் என்றும் தன் புகாரில் குறிப்பிடவில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
டைரக்டர் சதீஷ் அனந்தபுரிக்கு தெரியாமல் இந்த காட்சிகள் வெப்சைட்டில் வெளியிட்டிருக்க முடியாது என்றும், சென்சாரில் நீக்கப்பட்ட ஆபாச சீன்களை வெளியிட்ட பார் சேல் பட டீமுக்கும் பங்கு இருக்கிறதாகவும் கூறப்படுகிறது. சோனாவின் வீடியோவை நீக்க முயற்சிகளும் சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்ல, சொந்தக்காரர்கள் எல்லாருமே அவரை ஒருமாதிரியாக பார்க்க தொடங்கிவிட்டனராம். நிறைய பேர் போன் செய்து சோனாவை திட்டினார்களாம்.. அதனால் மனஉளைச்சலுக்கு ஆளானதாக சோனா சொல்கிறார்.. இந்த பலாத்கார சீன் பற்றி முதல்வர், டிஜிபி, சைபர் கிரைம் போலீசார் உட்பட பலரிடம் புகார் தெரிவித்தும், அந்த வீடியோவை இன்னும் நீக்கவில்லையாம். அதனால்தான் தற்கொலைக்கும் முயன்றதாக சோனா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
Post a Comment