மயிலாடுதுறையில் மாவட்டம் 6-காவலர்களுக்குகொரோனா தொற்று உறுதியானதால்காவல் நிலையம் இழுத்து மூடப்பட்டது.!
முதன் முதலாக சீன நாட்டில் ஒரு கறி மார்க்கெட்டில் உருவான கொரோனா என்ற ஒரு தொற்று கிருமி(வைராஸ்) ஆனது இன்று பல்வேறு நாடுகளை பயத்தின் உச்சத்தில் வீழ்த்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் நிலையத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
சில மாதங்களுக்கு முன் புது மாவட்டமாக தமிழ்நாடு அறிவித்த மாவட்டங்களுள் ஒன்று மயிலாடுதுறை.இது மிகவும் புகழ்பெற்ற ஊராகும்.மயிலாடுதுறைக்கு மாயவரம் என பழைய பெயரே மிகவும் புகழ் பெற்றது.இவ்வூருக்கு மயூர நாதர் தளத்தினாலே புகழ் பெற்றதெற கூறுவர்.இந்நிலையில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களில், 6-காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் காவல் நிலையம் முழுவதும் கிரிமிநாசினியை தெளித்து சுத்தப்படுத்தினார்கள். பின்னர் காவல் நிலையம் இழுத்து மூடப்பட்டது. இதனால் மயிலாடுதுறை காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது
இந்த கொரோனா வைரஸானது காற்றில் பரவுவது இல்லை,கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர் வெளிபுறங்களிலோ,அல்லது கூட்டம் கூடுமிடங்களிலோ அல்லது வீட்டிலோ தும்முவது,இருமுவது பொன்றவற்றைச் செய்யும்போது இவ்வைரஸானது பக்கத்தில் உள்ள பொருளில் படிகின்றது.அப்பொருளை நாம் தொடும்போது அது நம் கைகளில் தொற்றுகிறது.கொரோனா வைரஸ் கைகளில் இருக்கும் போது நாம் வாயில் கை வைப்பது,மூக்கில் கைகளை வைக்கும்போது நம் வாய்குள் இந்த கொரோனா வைரஸானது தொற்றிக் கொள்கிறது.
கொரோனாவை தடுக்கும் வழிமுறை சில.
❇️ வெளிபுறங்களுக்கு சென்று வந்த பிறகு கிருமி நாசினிக்களால் கைகளையும்,முகத்தையும் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.குளிப்பது நல்லது.
❇️ வெளிப்புறங்களுக்கு செல்லும்போது முகக்கவசங்களை கண்டிப்பாக போட்டுச் செல்ல வேண்டும்.
❇️ கண்டிப்பாக சமூக விலகலான 5 அடி ஒருவரை விட்டு விலகியே இருக்க வேண்டும்.
إرسال تعليق