கொரானா பாதிப்பால் இந்த ஆண்டு இறுதி வரை பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை

கொரானா பாதிப்பால் இந்த ஆண்டு(2020) இறுதிவரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை
 ‌‌‌‌

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஆரம்பித்த கொரோனாவால் இந்த வருடம் முழுதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
எப்படி உருவானது கொரனா வைரஸ்?
 
2020 பிப்ரவரி சீனா நாட்டில் முதன் முதலில் ஒரு மார்க்கெட்டில் உருவானது இந்த கொரோனா என்ற அர்க்கன்.இக்கொரனா வைரஸானது தொடர்ந்து பல மக்களை தாக்கியும்,அழித்தும் வருகிறது.இந்த கொரனா வைரஸானது அமெரிக்க,சீனா,இந்தியா,ரஸ்யா போன்ற பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதித்து வருகிறது.இந்த கொரோனா  என்ற அரக்கனை அழிக்க பல்வேறு நாடுகளில் உள்ள அறிவியாளர்கள்,மருத்துவர்கள் தடுப்பு மற்றும் தீர்வு மருந்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இது வரை எந்த ஒரு தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.சில நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டோம் என தகவல் வந்தாலும் அம்மருந்து அமலுக்கு இப்போது வருமாறு தெரியவில்லை.
பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை.

கொரோனா தாக்கம் அதிகமுள்ள இந்நிலையில் இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக திறக்க வில்லை.
இக்கடினமான இச்சூழலில் இந்தியாவின் பல மாநிலங்களில் இணைய வழிக்கல்வியை அந்தந்த பள்ளி நிறுவாகங்கள் கற்பித்து வருகிறது.தமிழ்நாட்டிலும் கொரோனா அதிகமாக‌ தாக்கியுள்ளதால் மார்ச் மாதம் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன‌‌.ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கபடும் என திட்டமிட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் மற்றும் பதினொன்று, பன்னிரண்டாம் விடுபட்ட தேர்வுகளும் கொரோனா பெருந்தொற்றால் தள்ளி போகிக் கொண்டே இருந்தது.இந்நிலையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே வருவதால் சமிபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வில்லா தேர்ச்சி பெற்றதாகவும், பதினொன்று பன்னிரண்டாம் விடுபட்ட தேர்வுகளும் தேர்வில்லா தேர்ச்சியாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.பல நாளாகவே பள்ளி கல்லுரிகள் எப்போது திறக்கபடும் என கேட்க பட்ட கேள்விக்கு தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் இந்த ஆண்டு( 2020 டிசம்பரில்)இறுதியில் திறக்கப்படும் என மத்திய உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதனால் பள்ளி‌ மற்றும் கல்லூரிகள் இணைய வழி(online class) கல்வியையே கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم